தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போர்குற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா மீதான நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை!

farhan_ci-300x225போருடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் விடயத்தில் ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் செயல்முறைகள் தொடர்பாக எந்த அனைத்துலக அழுத்தங்களும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் கூறியிருந்தது.

இந்த ஆண்டு இறுதியுடன் ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து பான் கீ மூன் விலகிச் சென்ற பின்னர், சிறிலங்கா தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதுகுறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்-

“புதியவர் அதனைச் செய்வாரா இல்லையா என்று என்னால் கூற முடியாது. ஆனால் சிறிலங்கா தொடர்பான எமது முன்னுரிமைகளில் மாற்றம் இதுக்காது.

பொறுப்புக்கூறல் விசாரணைகள் தேவை  என்பதே, ஐ.நாவின் தெளிவான நிலைப்பாடு.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...