Designed by Iniyas LTD
போர்குற்ற விசாரணையை சீர்குலைக்க சில தலைவர்கள் முயற்சி!
போர் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமையை சீர்குலைப்பதற்கு சில அரசியல் தலைமைகள் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.நல்லிணக்கத்தை நோக்கி முன்நகர வேண்டுமாயின் போர் பற்றிய பின்னணி மற்றும் அது குறித்த ஏதுக்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய பதிவு
சர்வதேச உண்மை அறியும் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமையை சீர்குலைப்பதற்கு சில அரசியல் தலைமைகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரும் போரின்போதும் சில அரசியல் தரப்புகள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தவே முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போர் காரணமாக உறவுகளைப் பிரிந்தவர்கள், காணாமல்போனவர்கள் வடக்கு, கிழக்கில் மட்டும் இல்லை. தெற்கிலும் இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசு உண்மையைக் கண்டறிவது தொடர்பிலான பொறிமுறைமையை உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ள அவர், கடந்த காலங்களில் வெறுமனே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.