Designed by Iniyas LTD
போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியங்களை அனுப்புவதற்கான காலஎல்லையை நீடிக்க வேண்டு கோள்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியங்களை அனுப்புவதற்கான காலஎல்லையை நீடித்து உதவுமாறு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹுசைனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஐ.நா விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்கும் காலஎல்லை இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் குறித்த கால எல்லையை மேலும் ஒரு மாதகாலம் நீடிக்குமாறு கோரியே, வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மனித உரிமை ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். சாட்சியமளிப்பவர்களுக்கு அச்சுறுத்தல்கள், இடையூறுகள் இருப்பதால் சாட்சியமளிப்பவர்களில் இன்னும் பலர் சாட்சியமளிக்காது இருக்கின்றனர். எனவே சாட்சியமளிக்கும் கால எல்லையை மேலும் ஒரு மாத காலம் நீடித்து உதவுமாறு அவர் கடிதம் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைக் கோரியுள்ளார்.