தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

PERARIVALAN-1234முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் மருத்துவ பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

 மேலும் சிறுநீரக தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அவ்வபோது சிகிச்சை பெற்று வருகிறார். இதன்படி, மருத்துவப் பரிசோதனைக்காக புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் இன்று மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

 தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் பிறகே அடுத்தக்கட்ட சிகிச்சைகள் குறித்து கூறப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...