Designed by Iniyas LTD
பௌத்த பிக்குகள் மோசமான வித்த்தில் செயற்பட்டனர்.
கொழும்பில் (04.08.14) அரசார்பற்ற அமைப்பொன்று காணமல் போனோரின் குடும்பத்தினருக்காக நடத்திய கலந்துரையாடல் ஒன்றின் போது அனுமதியில்லாமல் நுழைந்த பௌத்த பிக்குகள் அங்கிருந்தவர்களை மிரட்டியும் தாக வார்த்தைகளால் ஏசியும் குழப்பத்தை ஏற்படுத்தினர்.சமூக மற்றும் மதத்திற்கான நிலையம் மருதானையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலேயே இவ்வாறு பௌத்த பிக்குகள் மோசமான விதத்தில் செயற்பட்டனர்.
வடபகுதியை சேர்ந்த காணமற்போனவர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் அழைக்கப்பட்டிருந்த ஒரு மணிநேர கூட்டத்தின் இடையே அனுமதியின்றி உள்ளே நுழைந்த 20ற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அங்கிருந்தவர்களை மிரட்டியும் தாக வார்த்தைகளால் ஏசியதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பொலிஸார் அந்த இடத்திற்கு சென்ற போதிலும் அவர்களும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினர் என அரசாங்க தரப்பு கூறுகிறது.அவ்வேளை அங்கு பல இராஜதந்திரிகளும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.