தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி, நார்வே அணிகள்

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி, நார்வே அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

germanyகனடாவின் MONCTON நகரில் நடந்த B பிரிவு ஆட்டத்தில், ஐவரி கோஸ்ட் அணி, நார்வே அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் நார்வே அணி, கோல் அடித்து முன்னிலை பெற்றது.

மேலும் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், நார்வே அணி மேலும் 2 கோல்கள் அடித்தது. இறுதிவரை போராடிய ஐவரி கோஸ்ட் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் நார்வே அணி வெற்றி பெற்று, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.  B பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், தாய்லாந்து அணி, பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்தியது. 24வது நிமிடத்தில் கோல் அடித்த ஜெர்மனி அணி, முதல் பாதியில் ஒன்றுக்கு – பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தாய்லாந்தின் கோல் முயற்சிக்கு இறுதிவரை பலன்கிடைக்கவில்லை. தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி வீராங்கனைகள், இரண்டாவது பாதியில் 3 கோல்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

Comments
Loading...