Designed by Iniyas LTD
பெப்சி, கோக் , கேஎப்சி உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பெப்சி, கோக் வகை குளிர்பானங்களையும், கே.எப்.சி உணவுகளையும் தடை செய்ய வேண்டும் என பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த உணவுகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் கலந்திருப்பதால் அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.