Designed by Iniyas LTD
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது அமெரிக்கா!
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பானை அணியை வீழ்த்தி அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றது. கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஜப்பான் அணி, இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவை எதிர்கொண்டது. தொடக்கத்திலேயே அதிரடியை தொடங்கிய அமெரிக்க வீராங்கனை லார்டு (LLORD) அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்து அசத்தினார்.
மேலும் முதல் பாதியில் அமெரிக்க அணி 4 -1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின்னர் 2-வது பாதியில் இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்தனர். அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஜப்பான் கடுமையாக போராடினாலும், இறுதி வரை மேலும் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்று அமெரிக்கா மகளிர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்றது. இதன் மூலம் கடந்த முறை ஜெர்மனியில் நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பானிடம் அடைந்த தோல்விக்கு அமெரிக்கா பழிதீர்த்தது. இந்த வெற்றியை அமெரிக்க வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.