தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைபெரியாறு விவகாரம் : நாளை அணையின் துணை கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம்

mullai periyarமுல்லைபெரியாறு அணையின் துணை கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

அணையின் மூவர் கண்காணிப்புக் குழு தலைவர் நாதன் அளித்துள்ள உத்தரவு கடிதத்தின் பேரில் ஆய்வுக்கூட்டம் நடக்க உள்ளது. அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, சீ பேஜ் எனப்படும் கசிவுநீர் அளவு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மழைக்காலம் என்றால் மாதம் இரு முறையும், தொடர் மழை என்றால் வாரம் ஒரு முறையும் ஆய்வுக்கூட்டத்தை ‌நடத்துமாறு, தாம் அனுப்பிய கடிதத்தின் மூலம் துணை கண்காணிப்பு குழுவினருக்கு மூவர் கண்காணிப்பு குழு தலைவர் நாதன் அறிவுறுத்தியுள்ளார்.

Comments
Loading...