Designed by Iniyas LTD
மகிந்தவின் இனவாதத்துக்கு சார்பாக மைத்திரி ரணில்? ஐக்கிய சோஷலிசக் கட்சி
தோல்வியடைந்திருக்கிற மகிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பீடத்திற்கு ஏறுவதற்கு இருக்கக் கூடிய ஒரேயொரு வழி இனவாதம்.
மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மகிந்த ராஜபக்ஷவின் இனவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும்.
எனினும், அதனை விடுத்து மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ராஜபக்ஷவின் இனவாதத்திற்குச் சார்பானதாகவே தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர் என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறீதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் ஏற்பாட்டில் விசேட மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று இன்று பிற்பகல் யாழ். பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்,
வடக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தான் தற்போதைய ஐனாதிபதி காணப்படுகின்றார்.
இராணுவத்தினர் வசமுள்ள வடக்கு மக்களின் பாராம்பரியக் காணிகளை என்னால் முழுமையாக விடுவிக்க முடியாது என்றும் அவர் கூறுகின்றார்.
ஆனால், அதற்குப் பதிலாக ஜனாதிபதி ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சியில் தோன்றி நாங்கள் தேசிய நல்லிணக்கத்துக்காக்க அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றோம் என்று கூறுகின்றார்.
ஆனால், உண்மையில் இந்தச் சமூகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? தற்போது தென்னிலங்கைச் சமூகத்தில் மிகவும் பாரதூரமான வகையில் சிங்கள இனவாதம் மேலோங்கி வருகிறது எனவும் தெரிவித்தார்.