Designed by Iniyas LTD
மகிந்தவின் பதுக்கல் பணத்தை அறிய அமெரிக்காவிடம் உதவி!
மகிந்த ராஜபக்சவினால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்காவின் உதவியை ஸ்ரீலங்கா அரசாங்கம் நாடியுள்ளது.அந்தவகையில் மகிந்த ராஜபக்சவின் வங்கி கணக்குகள் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.
தொடர்புடைய பதிவு
அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவின் சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்த்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.