தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா மஹிந்த ராஜபக்ச தலைமை வழங்கும் பொதுஜன பெரமுன கட்சியின் இணைந்து  போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தகவலை ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களை அடிப்படையாக கொண்டு  ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சதுரிக்கா  தனது தந்தை மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் தொகுதியான பொலநறுவையில்  போட்டியிடவுள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

சத்துரிக்காவின் ஆலோசகரின் அறிவுரைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இம்முறை போட்டியிடும் உறுப்பினர்கள் வெற்றி பெற முடியாத நிலை காணப்படுவதனால்,

மகிந்தவுடன்  இணைந்து தேர்தலில் போட்டியிடுவதினால் ஜனாதிபதி மற்றும் மஹிந்தவுக்கு இடையில் அரசியல் கூட்டணியை வலுப்படுத்தி கொள்ள முடியும் என அவரின் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சதுரிக்காவின் இந்த தீர்மானம் தொடர்பில் ராஜபக்ச தரப்பில் சிறப்பான பதில் ஒன்று கிடைத்துள்ளதாகவும்  தெரிவிக்கபப்ட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...