Designed by Iniyas LTD
ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஈழம்தான் தீர்வு – தொல். திருமாவளவன்…
ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஈழம்தான் தீர்வு எனத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமது கட்சி தமிழகத்தில் இருந்தாலும் ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டுடனேயே செயற்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அங்கு எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எமது கட்சியைப் பொறுத்தவரை தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும்,
என்றென்றைக்கும் ஈழத் தமிழர் மனங்களில் நாங்கள் நேர்மையாகவும் தூய்மையாகவும் பணியாற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் ஈழத் தமிழர்களை எப்போதும் பிரித்துப் பார்த்ததில்லை என்றும், .
ஈழத் தமிழர்களை எமது தொப்புள் கொடி உறவு என்றல்லாமல் ஒரே குருதி உறவாகவே பார்க்கின்றதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.