தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்த ஆட்சியில் 4000 பில்லியன் ரூபா மோசடி?

மஹிந்த ராஜபக்ஷ காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள 4000 பில்லியன் ரூபா பிணைமுறி  மோசடி தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய மேலும் ஒரு ஆணைக்குழுவை அமைக்கவுள்ளதாகவும்,சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஆட்சிக் காலத்தில் பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டோ​ரே, தற்போது பிணை முறி மோசடி குறித்து பேசிவருகின்றனர். அவ்வாறு மோசடியில் ஈடுபட்டவர்களே தேர்தலிலும் போட்டியிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...