தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைத்திரி ஆட்சியில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை! வட முதல்வர் கவலை

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரல் தமிழ் மக்களின் எந்தவொரு எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2015 ஆட்சி மாற்றத்தின் பின்பு நாட்டில் ஜனநாயக சூழல் விருத்தி அடைந்திருப்பதில் சந்தேகம் இல்லை என்ற போதிலும், தமிழர்களின் எந்தவொரு எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை. யுத்தம் நிறைவடைந்து தற்பொழுது சுமூகமான சூழல் நிலவுகின்ற நிலையிலும் மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள் விடுவிக்கப்படாது படையினரின் வசமே இருக்கின்றன.
மேலும், மீனவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கும் எவ்வித தீர்வுகளும் வழங்கப்படாதுள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் வட மாகாணசபைக்கு பாதீட்டில் ஒதுக்கப்படுகின்ற பெருமளவான நிதி வழங்கப்படுவதில்லை, குறிப்பாக பயங்கரவாத தடை சட்டம் இன்னும் மாற்றி அமைக்கப்படாதுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

Comments
Loading...