தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்த விசுவாசிகளை கட்சியிலிருந்து தூக்கியெறிந்தார் மைத்திரி!

17054ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் என கருதப்பட்ட பலர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்  நேற்று காலை நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டத்திலேயே அந்தக் கட்சியின் புதிய அமைப்பாளர்களாக 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மஹிந்த விசுவாசிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 40 பேருக்கான நியமனக் கடிதங்கள் இன்று அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வினால் வழங்கி வைக்கப்பட்டன.

சிறிலங்கா ஜனாபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புதிய தொகுதி அமைப்பாளர்களாக 16 பேரும், மாவட்ட அமைப்பாளர்களாக 24 பேரும் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக மற்றும் அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன ஆகியோரும் பங்கேற்றிருந்த இந்த நிகழ்வில் கொழும்பை அண்மித்த புறநகர் பகுதியான கெஸ்பேவ தொகுதிக்கான அமைப்பாளராக இருந்த மஹிந்த அணியைச் சேர்ந்த காமினி லொக்குகே நீக்க்கப்பட்டு சந்தன கத்திரிஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மீரிகம தேர்தல் தொகுதிக்கான அமைப்பார் கோகிலா குணவர்தன நீக்கப்பட்டு சஞ்சய சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்புக்கான அமைப்பாளர் பதவியிலிருந்த சரத் குமார குணரத்ன நீக்கப்பட்டு லலித் டென்சில் நியமிக்கப்பட்டிருக்கின்றார்

களுத்துறை தேர்தல் தொகுதிக்கான பிரதான அமைப்பாளர் பதவியிலிருந்து ரோஹித்த அபேகுணவர்தன நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு சுமித் லால் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெலிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து மஹிந்த அணியைச் சேர்ந்த மஹிந்த யாப்பா அபேவர்தன நீக்கப்பட்டு அந்தஇடத்திற்கு ஹேமால் குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

குண்டசாலை தேர்தல் தொகுதி அமைப்பாளராக இருந்த கேஹேலிய ரம்புக்வெல நீக்கப்பட்டு அந்த வெற்றிடத்திற்கு கித்சிறி அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சீ.ரத்நாயக்க வகித்த வலப்பனை தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவிக்கும், பவித்ரா வன்னியாராச்சி வகித்த ஹேலியகொட தொகுதிக்கான பதவிக்கும் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments
Loading...