தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்களின் கருத்தை அறிந்த பின்னர்தான் இறுதித் தீர்வு! சம்மந்தன்

தீர்வு முன்­வைக்­கப்­பட்ட பின்­னர், மக்­க­ளின் ஆலோ­ச­னை­க­ளை – கருத்­துக்­களைக் கேட்­போம். அதன் பின்­னர்­தான் முடி­வெ­டுப் போம். எமது மக்­கள் ஏற்­காத தீர்வை நாங்­கள் ஒருபோதும் ஏற்­றுக்கொள்­ளப்போவ­தில்லை” இவ்­வாறு எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

மட்­டக்­க­ளப்­பில் நேற்று நடை­பெற்ற தந்தை செல்வா நினை­வுப் பேரு­ரை­யில் உரை­யாற்­றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தந்தை செல்வா 1947ஆம் ஆண்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­டார். அவர் இந்த நாட்டின் அர சியல் ஆட்சிமுறை ஏற்றுக்கொள்ளக்கூடியது
அல்ல என்ற வாதத்தை முன்வைத்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயணம் இன்றும் தொடர்கின்றது. நாங்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எமக்குத் தேவை எமது மக்களின் ஒற்றுமையாகும். எமது மக்கள் அனைவரும் ஒருமித்து நிற்க வேண்டும்.

நாங்கள் ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கின்றோம். கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது, அனைவரினதும் ஆதரவுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பகைமையை வளர்கக் கூடாது.

உருவாக்கப்படுகின்ற அரசமைப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். இது ஒரு சாதாரணமான விடயமுமல்ல, நடைமுறைச் சாத்தியமற்ற விடயமுமல்ல. எம்முடைய அரசியல் சூழலில் அதனை அடையக் கூடிய நிலமை இருக்கின்றது. அதற்காக நாங்கள் அனைவரினதும் ஆதரவுகளைப் பெற்றுச் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாங்கள் பிடிகொடுக்கும் அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது.

இந்த நாட்டிலுள்ள ஆட்சிமுறை எமக்கு உதந்ததாக அமைவதற்கு இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவோ அதற்குப் பிறகும் ஏற்பட்ட வாய்ப்புக்களை நாங்கள் இழந்திருக்கின்றோம். இதனை நாங்கள் இழக்க முடியாது.

எமது மக்கள் தங்களது இறைமையின் அடிப்படையில் அதிகாரங்களைக் கைப்பற்றி, அவற்றைத் தாங்கள் பயன்படுத்தி, அதன் மூலம் தங்களுடைய வேணாவாக்களையும், உரிமைகளையும் அனுபவிக்கக் கூடிய நிலமை ஏற்பட வேண்டும்.

அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கின்றோம். இவை நடைபெறுவதற்கு எமது மக்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். தமிழ் மக்கள் ஒருமித்து தமிழ் அரசுக் கட்சியின் பின்னால் நின்றுள்ளார்கள்.

மக்களை ஆட்சி புரிவதற்கு அந்த மக்களின் ஒப்புதல் இருக்க வேண்டும். இதனை அந்த மக்கள் ஜனநாயக ரீதியில் தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. எமது விருப்பத்துக்கு மாறாகத்தான் நாங்கள் ஆட்சி செய்யப்படுகின்றோம் – என்றார்.

Comments
Loading...