தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்களின் ஜனநாயகம் ரணிலுக்கு வேடிக்கையாகிவிட்டது!

g-l_-peiris_1-450x280மக்களின் ஜனநாயகத்தை வேடிக்கையான ஒர் விடயமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுப்பது தெரிவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலக வளாகத்தில் வைத்து ஊடகவிலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என கேட்டால், அது கடவுளுக்குத் தான் தெரியும் என பிரதமர் கூறுவதாக ஜி.எல்.பீரிஸ் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்யும் மக்களின் சிவில் உரிமையை அரசாங்கம் பறித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா நாட்டில் இல்லாத தருணத்தில், அவரிடம் எல்லை நிர்ணய அறிக்கை கையளிக்கப்படும் என அரசாங்கம் கூறியிருந்ததையும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளியிட்ட ஜி.எல்.பீரிஸ், பிரதமர் தலைமையி்லான அரசாங்கத்தின் நாடகம் அம்பலமாகியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

Comments
Loading...