தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்களின் நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் – இரா சம்பந்தன்

மக்களின் நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே கூட்டமைப்பின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்றும், படையினரின் வசதிக்காக அவர்களை வெளியிடங்களுக்கு மாற்றவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மக்களின் நிலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் மக்கள் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கில் மக்களின் பல காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில்,

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் நீண்டகாலமாக தமது நிலங்களை விடுவிக்கக் கோரி ஜனநாயக வழியில் போராடி வருவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு – கிழக்கில் சில பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிவித்த அவர்,

மக்களின் நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என்றும் மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லையென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...