Designed by Iniyas LTD
மக்களின் வரிப்பணத்தின் மூலம் இலவச பொருட்கள் வழங்குகின்றார் ஜெ – ஸ்டாலின்
மக்களின் வரிப்பணத்தின் மூலம் இலவச பொருட்களை வழங்கிவிட்டு, பால், பேருந்து மற்றும் மின் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்திவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 
ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.அம்மாசியை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஓமலூர் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் கொஞ்சம் கூட கவலைப்படாத முதலமைச்சர், ஜெயலலிதாதான் என குறை கூறினார்.
அதிமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் சாலை வசதி, பள்ளிக்கட்டிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதையும் நிறை வேற்றவில்லை என புகார் கூறிய ஸ்டாலின், அதிமுக அரசு வழங்கிய மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள், காயலான் கடைகளில் தான் உள்ளதாகவும் விமர்சித்தார். மக்களின் வரிப்பணத்தின் மூலம் இலவச பொருட்களை வழங்கிவிட்டு, பால், பேருந்து கட்டணம் மற்றும் மின் கட்டணத்தை, அதிமுக அரசு உயர்த்திவிட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.