Designed by Iniyas LTD
மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி!
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நல கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த துரை ரவிக்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திறந்த வேனில் நின்றபடி நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து முதன்முறையாக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்கிறார்கள். அவர்களால் முடியாது. இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபடுகிறது.
தி.மு.க., அ.தி.மு.க. தாங்கள் கொள்ளையடித்த பணத்தை கோடிக்கணக்கில் தேர்தலில் செலவு செய்கிறது. கூட்டணி ஆட்சி கிடையாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நல கூட்டணி வெற்றிபெற்றால் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்கிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.