தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் நலக் கூட்டணி ஊழலற்ற ஆட்சி அமைக்கும் – ஜி.கே. வாசன்

தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் த.மா.கா. கட்சியில் இணையும் விழா தேனாம்பேட்டை அலுவலகத்தில் இன்று நடந்தது.  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் மோகன், சத்தியராஜ், ஜெயராமன், தொழிற்சங்க தலைவர் வேல்முருகன், மயிலை தாரா உள்பட அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 100 பேர் த.மா.காவில் இணைந்தனர்.  GK Vasan

அதன் பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 21அல்லது 22-ந் தேதி வெளியிடப்படும். தே.மு.தி.க.- மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 20-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறேன். அந்த பிரசார பயணம் வருகிற மே 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவேன். மக்கள் நலக் கூட்டணி ஊழலற்ற ஆட்சி அமைக்கும்.  மக்கள் நலக்கூட்டணியில் த.மா.கா. இணைந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறேன்.

கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஒருமித்த கருத்து எற்படவில்லை. மேலும் தேர்தல் நெருங்குவதாலும், மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தோம். கடைசி நேரத்தில் சேர்ந்ததால் எங்களது கட்சிக்கு 26 தொகுதிதான் கிடைத்தது. முன் கூட்டியே சேர்ந்திருந்தால் அதிக தொகுதிகள் கிடைத்து இருக்கும்.  ஐ.ஐ.டி. மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை வருடத்துக்கு ரூ.2 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...