Designed by Iniyas LTD
வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – ராஜேஷ் லக்கானி
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியிடப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய, ஆன்லைன் மூலம் இன்று இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இதுவரை 6 லட்சத்து 55 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட லக்கானி, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். தேர்தல் பணியில் ஈடுபடும் 3 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, வரும் 24 ஆம் தேதி முதல் கட்ட பயிற்சி தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி வாங்கிய பிறகே, வேட்பாளர்கள் ஊடகங்களுக்கு விளம்பரம் அளிக்க முடியும் என கூறிய தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி, இல்லையெனில், விளம்பரங்கள் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள், செல்போன் ரீசார்ஜ் செய்து வாக்குகள் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், செல்போன் நிறுவனங்களுக்கும், ஏஜன்டுகளுக்கும் சராசரியை விட இந்த மாதம் 20 சதவீதம் ரிசார்ஜ் கூடினால், தேர்தல் ஆணையத்திற்கு உடனே தெரியப்படுத்த, செல்போன் நிறுவன ஏஜன்டுகளுக்கு உத்தரவிடப்பபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய: http://www.elections.tn.gov.in/