தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் மகிந்த மீது வைத்த நம்பிக்கை இழக்கப்பட்டு வருகின்றது- திஸ்ஸ விதாரண

நாட்டு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை தற்போது இழக்கப்பட்டு வருதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஐ.ம.சு.கூ மீண்டும் ஊவா மாகாண சபையை கைப்பற்றியதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இது நாட்டு மக்கள் அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும் ஒரு சில மக்கள் வழங்கிய தீர்ப்பிலால் அரசுக்கு பலத்த வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.Tissa Vitharana

குறிப்பாக அரசுக்கெதிரான எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கும் நாட்டில் தலைதூக்கியுள்ள பொருளாதார சுமை,ஊழல் மோசடி,வீண்ஆடம்பர செலவு போன்றவை தொடர்பில் அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க தவறியமையே இதற்கு பிரதான காரணமாகும். இவ்வாறு காட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க தவறியதால் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எதிர் கட்சிகள் பிரசாரங்களின் மூலம் மக்களை திசை திருப்பியுள்ளனர்.எனவே இது தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மக்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை இழக்க நேரிடும் என்றார்.

Comments
Loading...