Designed by Iniyas LTD
மக்கள் வாழ்ந்த காணிகள் படையினர் நிலைகொள்வதற்காக ஆடம்பர பங்களாக்கள் – சம்மந்தன்
மக்கள் வாழ்ந்த காணிகள் அந்த மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, பாதுகாப்பு படையினர் நிலைகொள்வதற்காக ஆடம்பர பங்களாக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து:-
“நாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதிவப்படுத்துகின்றோம். ஆனால் எங்களுக்கு 5 மில்லியன் மாத்திரமெ வழங்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு 30 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இதை எப்படி உங்களால் செய்ய முடிகிறது? நீங்கள் அரசாங்க பணத்தின் பாதுகாவலர்கள். நீங்கள் அரசாங்க சொத்தின் பாதுகாவலர்கள். எங்களுடைய மக்கள் கஷ்டப்படவில்லையா? எங்களுடைய மக்கள் சமமானவர்கள் இல்லையா? எங்களுடைய மக்கள் இரண்டாம் தர பிரஜைகளா? தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 மில்லியன் ரூபாய்களும் ஏனையவர்களுக்கு 30 மில்லியன் ரூபாய்களும் கொடுப்பதற்கான காரணம் இதுவா? நான் யாரையும் குற்றம்சாட்ட வேண்டிய அவசியமில்லை. நான் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டிய அவசியமில்லை. நான் அவ்வாறு இரஞ்சுவது எனது மக்களுக்கு விருப்பமும் இல்லை. எனது மக்கள் பிச்சைக்காரர்களும் இல்லை. எனினும், நீங்கள் இதனை அறிந்துக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கின்றேன். இந்த விடயத்தை நான் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.”
வட கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இங்கு கருத்து தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து:-
“டென்னிஸ் அரங்குகள் இந்த மண்ணில் உருவாக்கியுள்ளன. கொல்வ் ஆடுகளங்கள் இந்த மண்ணில் உருவாகியுள்ளன.நீச்சல் தடாகங்களும் இந்த மண்ணில் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் நிலைகொள்வதற்காக ஆடம்பர பங்களாக்களும் இந்த மண்ணில் அமைக்கப்பட்டன. எமது மக்கள் வாழ்ந்த காணிகளே அவை. எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆணி வேராக அமைந்த காணிகள் அவை. அந்த காணிகள் பறிக்கப்பட்டு, அவை இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காரணத்திற்காக ஆயிரம் ஆயிரம் தமிழ் குடும்பங்கள் அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில தீர்வுகளை வழங்குவதற்கு நீங்கள் பாராளுமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை கொண்டுவந்தீர்கள். எனினும், எமது மக்களின் நிலை என்ன? இந்த மக்கள் வேறு யாரை விடவும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இதனை எவராலும், மறுதளிக்க முடியுமா?” என தெரிவித்துள்ளார்.