தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் தமிழ்மொழி விழா

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்ட தமிழ் மொழித்தினம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மண்முனை வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் கே.ரகுகரன் தலைமையில் இந்த தமிழ்மொழி தினப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயக்கல்வி பணிப்பாளர் கே.மயில்வாகனம் கலந்துகொண்டார்.

நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்ட கல்வி பிரிவுக்குட்பட்ட சுமார் 38 பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் 60இற்கும் மேற்பட்ட போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வின்போது தமிழ் கலை கலாசார வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக முன்னாள் வட. கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் எதிர்மன்னசிங்கம் வலய கல்வி அலுவலகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் நடைபெற்ற எழுத்தாக்கப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

தமிழர்களின் கலை கலாசாரத்தினை எதிர்கால சமூகத்திற்கு வழங்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக நிகழ்வில் உரையாற்றிய வலயப் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை மாணவர்கள் மத்தியில் உள்ள திறன்களை வெளிக்கொணரும் வகையிலும் தமிழ் பாரம்பரியங்கள் அதன் அடையாளங்களை எதிர்கால சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலும் தமிழ் மொழித்தின போட்டி நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Loading...