Designed by Iniyas LTD
மட்டக்களப்பு புனானையில் சிங்கள குடியேற்றங்கள் – சீனித்தம்பி யோகேஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் புனானையில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் வாழ்ந்து வந்த பெரும்பான்மையின மக்களேமீள்குடியேற்றம் செய்யப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஐந்து குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். 5 குடும்பங்கள் அங்கு முன்னர் வசித்த போதிலும், 29 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. 24 குடும்பங்கள் மேலதிகமாக குடியேற்றப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் புனானையில் சிங்களவர்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.
அங்கு 129 சிங்களக் குடும்பங்கள் வசித்தனர் என்றும் அதற்கான ஆவணங்களை தயாரிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இராணுவ ஆளுநர் போனதும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நவடிக்கைகள் குறையும் என்று நினைத்தபோதும் தற்போது இனவாத ஆளுநர் இனவாதக் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சீனித்தம்பி யோகேஸ்வரன் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.