Designed by Iniyas LTD
மட்டு-பெரியகல்லாறில் வாகனம் விபத்து! 9 பேர் படுகாயம்
மட்டக்களப்பு – பெரியகல்லாறில் வாகனம் தடம்புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்தானது இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை, மட்டக்களப்பு தாளங்குடாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்றுகொண்டிருந்த பட்டா ரக வாகனத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பெரியகல்லாறு பிரதான வீதியில், வாகனம் தடம் புரண்டு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்காக உறவினர்களின் வீட்டிற்குச் சென்று திரும்பியவர்களே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்தவர்கள் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலை மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.