தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டு மீனவர் வாவியில் மூழ்கி பலி!

article_1454931995-indexமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப் வாவிக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டிலிருந்து இன்று திங்கட்கிழமை மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் வாவிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, திராய்மடுப் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பென்சமின் ஜுலியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர் கட்டில் இருந்துகொண்டு வலை வீசியபோது தவறி விழுந்து வலையில் சிக்குண்டுள்ளார். இதனால்  அவருக்கு நீந்தி தப்பிக்க முடியாமல் போனதாக சம்பவத்தை கண்டவர்கள் தெரிவித்தனர்.

Comments
Loading...