தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மணிப்பூரில் பண பலத்தால் பாஜக வெற்றி : இரோம் ஷர்மிளா குற்றச்சாட்டு

irom-sharmilaமணிப்பூரில் பண பலத்தால் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக சமூக சேவகி இரோம் ஷர்மிளா புகார் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் மூன்று முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த இபோபி சிங்கை எதிர்த்துப் போட்டியிட்ட சமூக சேவகி இரோம் ஷர்மிளா 90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.

தேர்தல் தோல்வியால் அரசியல் நடைமுறைகளைக் கண்டு விரக்தி அடைந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேரள மாநிலம், அட்டப்பாடியில் உள்ள தியான மையத்தில் தங்குவதற்காகச் செல்லும் வழியில் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மணிப்பூர் மாநில மக்கள் எதிர்வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண பலம், ஆள் பலத்தால் தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறி அமைதியான ஓரிடத்தில் தங்கி இருக்க விரும்பினேன்.

எனது போராட்டங்களுக்கு கேரள மக்களின் ஆதரவு எப்போதும் இருந்து வந்தது, எனவேதான் மன அமைதிக்காக, கேரள மாநிலம், அட்டப்பாடியைத் தேர்வு செய்திருக்கிறேன். சிறிது நாள்கள் அங்கு தங்கி இருப்பேன் என்றார்.

கேரள பத்திரிகையாளர் பஷீர் மடாலாவின் ஏற்பாட்டில், இரோம் ஷர்மிளா அட்டப்பாடியில் உள்ள தியான மையத்தில் சிறிது நாள்கள் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

Comments
Loading...