Designed by Iniyas LTD
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம் அமைப்புகள் ஆதரவா?
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாத்திற்க்கு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆதரவு தெரிவித்து பேனர் வைக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார்.
சர்ச்சைக்குரிய அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் பாபர்-மசூதி ராமர் கோயில் பிரச்சனையை நீதிமன்றத்து வெளியே சம்பந்தபட்டவர்கள் பேசி ஆலோசித்து பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கியது.
இந்நிலையில் லக்னோவில் சில இஸ்லாமிய அமைப்புகள் சார்ப்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர் வைத்த நபர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் பேனர் வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.