தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்திய அரசின் நடவடிக்கையால் ”எதிர்காலத்தில் பொருளாதாரம் மேம்படும்” :அருண் ஜெட்லி

arun-jaitleyடெல்லியில் உள்ள விஜய் பவனில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

* ரொக்கமில்லா பண பரிமாற்றம் என்பதன் நோக்கம், குறைந்தளவு ரொக்கம் பயன்படுத்துவதாகும். முழுவதும் ரொக்கம் பயன்படுத்தக்கூடாது என்பதல்ல.

* ஆனால் சில அரசியல் கட்சிகளும், மீடியாக்களும் தவறாக தகவல் தருகின்றன. இந்த விளக்கம் முற்றிலும் தவறானது.

* பிரதமர் மோடி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அத்தகைய அறிக்கையில் குறிப்பிடவில்லை.

* பில்கேட்ஸ் என்னிடம் கூறினார் எங்களிடம் 100 கோடி கைபேசிகள் உள்ளது என்றார். நான் கூறினேன் 109 கோடி ஆதார் அட்டைகள் உள்ளது.  அதனை வைத்து கொண்டு நாங்கள் டிஜிட்டல் இந்தியாவை செழிக்க செய்வோம்.

*  ஆதார் அட்டை மூலமான மின்னணு பரிவர்த்தனைக்கு கைவிரல் ரேகை மட்டுமே போதுமானது.

*  வங்கி அட்டை, கைப்பேசி இல்லாதோருக்கு ஆதார் அட்டை மூலம் மின்னணு பரிவர்த்தனை அறிமுகம்.

*  மத்திய அரசின் நடவடிக்கையால் எதிர்காலத்தில் பொருளாதாரம் மேம்படும்.

*  வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புபணம் பற்றிய தகவல்களை திரட்டி வருகிறோம்.

*  வங்கி மூலம் பணப்பரிவத்தனை செய்தால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

*  பணத்தாள்களை மக்கள் குறைவாக பயன்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Comments
Loading...