தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்திய அரசு திமோர் தீவில் தத்தளிக்கும் ஈழ அகதிகளைக் காப்பாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்

thirumaமத்திய அரசு திமோர் தீவில் தத்தளிக்கும் ஈழ அகதிகளை காப்பாற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நியூசிலாந்து நாட்டில் தஞ்சம் கோரி கடல் வழியாகப் படகில் பயணம் செய்த 54 ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியச் சுங்கத் துறையினராலும், கடற்படையினராலும் வழிமறிக்கப்பட்டு, அவர்களுடைய படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடுக்கடலில் தத்தளித்த அவர்கள் நீந்தி தற்போது திமோர் தீவுக்கு உள்பட்ட குப்பாங் என்ற இடத்தில் அவர்கள் அனாதைகளாக உள்ளனர். அவர்களின் துயர்நிலையை உணர்ந்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, அவர்களைக் காப்பாற்ற வேண்டும். ஈழத் தமிழர் சிக்கலுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதன் மூலமே இத்தகைய பிரச்னைக்கு முடிவு கட்ட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...