தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனித புதைகுழி வழக்கு : குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவிலிருந்து மன்னார் பொலிஸாரிடம் மாற்றம்

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு அருகில் உள்ள சந்தேகத்திற்கு இடமான கிணற்றையும் அகழ்வு செய்வதற்காக மன்னார் நீதிமன்றினால் நடவடிக்கை எடுக்கபட்டிருக்கின்ற போதும் இந்த அகழ்வு பணியில் தொடர்ந்து கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்திற்கிடமான கிணற்றை அகழ்வு செய்வதற்கு தாம் முன்னின்று ஈடுபடமுடியாத சூழ்நிலை இருப்பதாகவும் இதை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கும் படியும் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

mannar_human_2

கடந்த 2013ஆம் ஆண்டு மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி சம்பவத்தை தொடர்ந்து அங்கு அகழ்வு செய்யபட்ட புதைகுழியில் இருந்து 83 மனித மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது சம்பந்தமான வழக்கு மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு சம்பந்தமாகவும் அதற்கு அருகில் இருக்கும் கிணறு ஒன்றும் அகழ்வு செய்யபபடவேண்டும் என காணாமல்போனவர்களின் சார்பாக முன்னிலையாக சட்டத்தரணிகளின் வேணடுகோளுக்கிணங்க அகழ்வு சம்பந்தமான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துகொள்ளபட்டது.

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் மரபணு சம்பந்தமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கும்படி மன்னார் நீதிமன்றம் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குறித்த அறிக்கையை இன்று மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

அதாவது இந்த எச்சங்கள் குறித்த பரிசோதனை அறிக்கையை என்பதை சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கையை இன்று சமர்ப்பிக்க முடியவில்லை என குற்றத்தடுப்பு புலனாய்வு பொலிசார் மன்றில் தெரிவித்திருந்த நிலையில் அடுத்த தவணையில் இதனை சமர்ப்பிப்பதாகவும் மன்றில் தெரிவித்தனர்.

சர்வதேச ரீதியில் மரபணுவை ஆய்வுசெய்யவேண்டும் என காணாமல்போனோர் சார்பில் முன்னிலையாக சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பித்மைக்கு அமைய மன்று ஏற்றுகொண்டதுடன் இது சம்பந்தமாகவும் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ஏற்கனவே அதே இடத்தில் அடையாளம் இடப்பட்டிருக்கும் சந்தேகத்திற்கு இடமான கிணற்றை தாம் முன்னின்று அகழ்வு செய்யும் பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் இதை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கும்படியும் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். இதனை மன்னார் பொலிஸாரும் எற்றுகொண்டு அடுத்த தவணையில் சந்தேகத்திற்கிடமாக இருக்கும் கிணற்றை அகழ்வு செய்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்வருவதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கிணற்றுக்குள் இருக்கும் மணல்களை அகழ்வு செய்யும்படி நீதிவான் மன்னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளையில் சட்டமா அதிபரின் ஆலோசணையும் தங்கள் பெறவேண்டிய அவசியம் இருப்பதாகவும் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Comments
Loading...