தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் வீதிகள் புனரமைப்பு பணி தொடக்கம்

mannarமன்னார் எழுத்தூர் மற்றும் தாழ்வுப்பாடு கிராமங்களில் இரண்டு வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கான பணிகள் வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் டெனிஸ்வரனால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வடமாகாண வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக மன்னார் மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன்  ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு வீதிகளையும் புனரமைப்புச் செய்வதற்கான திட்டம் மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

எழுத்தூர் சந்தியுடன் தலைமன்னார் பிரதான வீதியை இணைக்கும் வீதி மற்றும் தாழ்வுப்பாட்டில் கிறிஸ்தவ ஆலயம் தொடங்கி கடற்கரைக்குச் செல்லும் பகுதிவரையான வீதியுமே இவ்வாறு புனரமைப்பதற்கான ஆரம்பப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் மதகுருக்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், கிராமமட்ட அமைப்புக்களின் நிர்வாகசபை அங்கத்தவர்கள், மீனவர் சங்கங்களின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த மாதம் இதே நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆண்டான் குளம் கருங்காலித் தாழ்வு வீதி மற்றும் குமானயங்குளம் ஆலய வீதி என்பனவற்றுக்கான புனரமைப்புப் பணிகள் 2 மில்லியன்  ரூபா செலவில் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண வீதி அபிவிருத்தி  அமைச்சர் பா.டெனிஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...