Designed by Iniyas LTD
மனைவியை பயமுறுத்த சவப்பெட்டியை கொள்வனவு செய்த குடிமகன்!
தன்மனைவி மீதுள்ள கோபத்தில் சவப்பெட்டியை வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டுள்ளார் ஒருவர்.இதனைக் கேட்ட மலர்ச்சாலை முகாமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். வெறும் சவப்பெட்டிகளை வீடுகளுக்கு அனுப்பி வைக்க முடியாது. நீங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றீர்களா?, என்று முகாமையாளர் வினவியுள்ளார்.
இல்லை, எனது மனைவியை அச்சுறுத்தவே இந்த பெட்டியை கொள்வனவு செய்கின்றேன், வீட்டில் எனது அறையில் இந்தப் பெட்டியை வைத்துக் கொள்ளப் போகின்றேன், எனக்கூறி மலர்ச்சாலையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
சவப்பெட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மறுநாள் காலை மலர்ச்சாலைக்கு சென்று முற்பணத்தை மீளப் பெற்றுக் கொண்டுள்ளார். குடிபோதையில் மனைவியை அச்சுறுத்த இவ்வாறு சவப்பெட்டியைக் கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.