தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனைவி மற்றும் மாமியாரை கொடுரமாக கொலை செய்த நபர் கைது!

பொத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிபிஹெல பிரதேசத்தில், நபரொருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலைச் செய்துள்ளாரென பொத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு (06) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 25 வயதுடைய தக்சிலா துலஞ்சலி, அவரது தாயான 46 வயதுடைய ரோஹினி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

கொலைக்கு குடும்பத்தகராரே காரணம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 5 மாத காலமாக மனைவியை பிரிந்து கணவர் ஹபராதுவ பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (06) இரவு வீட்டுக்குள் நுழைந்த அவர் இவ்வாறு மனைவியையும், அவரது தாயையும் கொலை செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அநுராதபுரம் துடுவெவ பகுதியில் தனிமையில் வீட்டில் வாழ்ந்து வந்த 57 வயதுடைய பெண் ஒருவரை, துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர், குறித்த பெண்ணின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பொல்லால் தாக்கி குறித்த நபரை கொலை செய்ததன் பின்னர், அப்பெண் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான குறித்த பெண்ணை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...