Designed by Iniyas LTD
மன்னாரில் உள்ள இராணுவ, கடற்படை முகாம்களிலும் மனித புதைகுழிகள் இருக்கலாம்

மன்னாரில் உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிறந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் யுத்த காலப் பகுதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட இராணுவ மற்றும் கடற்படை முகாம்களிலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் கடற்படை மற்றும் இராணுவம் இன்னும் மக்களுடைய காணிகளில் பாரிய முகம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பல இராணுவ , கடற்படை முகாம்களை நிறந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாங்கள் காணாமல்போன எங்களுடைய பிள்ளைகளை தேடி கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான் நிலையில் படையினர் முகாம்களுக்குள் இருந்து எத்தனையோ ஆயிரம் எலும்புகூடுகள் வர போகின்றது என்பதனாலேயே அவர்கள் மறைமுகமாக அந்த காணிகளை தங்களே கையாள வேண்டும் என தெரிவிக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஒரு போதும் இந்த காணிகளை படையினருக்கு நிரந்தரமாக வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
படையினருக்கு குறித்த காணிகளை வழங்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு நிரந்தரம் ஆகிவிடும் என்பதால் தங்களுக்கு எந்த முடிவும் கிடைக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பத்தில் மக்கள் வங்கியாக இருந்த பகுதியை இராணுவம் முகாம் அமைத்து இருந்தார்கள்.
அதே போன்று சனிவிலச் கடற்படை முகாம், பள்ளிமுனை முகாம், அவற்றில் எல்லாம் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஏன் என்றால் அவ் முகாம்களில் எல்லாம் யுத்த காலத்தில் மக்களை கூட்டிச் சென்று விசாரித்த இடங்கள் போன்றவற்றிலும் நிறைய எலும்புக்கூடுகள் வரலாம் என சந்தேகம் இருக்கின்றது.
அதனால் அந்த காணிகளை கடற்படைக்கோ , இராணுவத்திற்கோ எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் .
மேலும் பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.