தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் கடற்படை அடாவடி! 71 மீனவர்கள் கைது

nevy-415x260மன்னார் – முத்தரிப்புத்துறைகடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 71 மீனவர்களை  சிலாவத்துறை  கடற்படையினர் கைது செய்து ள்ளதுடன்,  13 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இன்று  காலை 7 மணிக்கு குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது   காப்புறுதி பற்றுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பிரதி ஆகியவற்றை  பரிசீலித்த சிலாவத்துறை  கடற்படையினர் அவை இல்லையெனத் தெரிவித்து  குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர்.
நறுவிலிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 60 பேரும், வங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரும், சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேருமே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், நறுவிலிக்குளம் மீனவர்களின்  9 படகுகளையும், வங்காலை மீனவர்களின் 1 படகு மற்றும்  சிலாவத்துறை மீனவர்களின் 3 படகுகள்  ஆகியவற்றை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் சிலாவத்துறை கடற்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தம்மை விடுவித்தால் கைதுசெய்யப்பட்ட அனைத்து மீனவர்களின்  காப்புறுதி பற்றுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பிரதிகளை எடுத்துவர முடியும் என மீனவர் ஒருவர் கடற்படையினரிடம் கேட்டபோது, இதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் பாஸ் நடைமுறை  இல்லாமல் தாம் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும், தற்போது கடற்படையினரின் கெடுபிடி களுக்கு முகம்கொடுப்பதாகவும்  தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள  மன்னார் – நறுவிலிக்குளம்  மீனவர் சங்க செயலாளர்  அ.எப்ரோம்  தெரிவித்தார்.
கடந்த 18 ஆம் திகதி முத்தரிப்புத்துறை கிராம மக்களால் கடற்படை அதிகாரிகள்  தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர்  முத்தரிப்புத்துறையை அண்டிய பகுதிகளில்  தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள்  தினமும் கைதுசெய்யப்படுவதுடன்,  அவர்களின் படகுகளும்  பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறான  சம்பவங்களினால்  மன்னார் மாவட்ட மக்கள்  மத்தியில்  அச்சமான சூழல் உருவாகியுள்ளது.
Comments
Loading...