Designed by Iniyas LTD
மன்னாரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அவர்கள்: கடலுக்கு செல்லாமல் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
எரிபொருக்கான மானியம்
எரிபொருக்கான மானியம் வழங்கப்படுதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதும் அது பயனற்ற ஒரு விடயம் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அத்துடன் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக சிலாபம் நகரின் பல பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் சிலாபம் மீன் விற்பனை நிலையமும் மூடப்பட்டு, படகுகள் கடலுக்கு செல்லாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
