தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் 29 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளாகஞ்சா பறிமுதல்

மன்னாரில் 29 இலட்சம் ரூபா பெறுமதியான 24 கிலோ   கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை   மன்னார் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பேசாலை ஒளுதுடுவை பகுதியில் வைத்து இன்று அதிகாலை குறித்த  சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்உள்ளனர்.

பேசாலை, திருதேப்புப் பகுதியைச்  குறித்த சந்தேகநபர்கள் இருவரும், மோட்டார் சைக்கிள்  பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கஞ்சா பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...