Designed by Iniyas LTD
மன்னார் கோட்டையை புனரமைப்பதற்கு போர்த்துக்கல்லிடம் உதவிகோரியுள்ளது அரசாங்கம்..
போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட மன்னார் கோட்டையை, புனரமைப்பதற்கு, இலங்கை அரசாங்கம் போர்த்துகல் அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்துக்கல் நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சின் செயலர் தெரேசா ரிபேரியோவை, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க கடந்தவாரம் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.
இதன்போதே, கடந்த 1560ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட மன்னார் கோட்டையை புனரமைப்பதற்கான திட்டம் குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதோடு போர்த்துகல் நாட்டின் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பது குறித்தும், இரண்டு நாடுகளும் சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் கூட்டாகச் செயற்படுவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

