தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாத்திமா வித்தியாலயத்தில் உள்ளக விளையாட்டரங்கம்!

மன்னாரில் மாணவர்களிடையே உள்ளக விளையாட்டுத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் Child Fund   நிறுவனமும்,வடமாகாண சபையும் வழங்கிய நிதி உதவியுடன் மன்னார் பேசாலை பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ‘உள்ளக விளையாட்டுத்திடல்’ நேற்று வெள்ளிக்கிழமை(29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.play

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜோ.ஸ்ரனிஸ்லோஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த உள்ளக விளையாட்டுத்திடல் திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஞா.குணசீலன்,விசேட விருந்தினராக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன்,கௌரவ விருந்தினராக கட்டுமாண திட்ட அலுவலகர் எஸ்.றொபின்சன் ஆகியோர் இணைந்து குறித்த உள்ளக விளையாட்டுத்திடல் திறந்து வைத்தனர்.  அதனைத்தொடர்ந்து உள்ளக விளையாட்டுக்கள் இடம் பெற்றது. இருதியில் குறித்த உள்ளக விளையாட்டுத்திடலை அமைப்பதற்கு பாடுபட்டவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...