தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

“தமிழில் தேசிய கீதம்” தேசத்துரோக குற்றம் – கம்மன்பில

தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்று உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.udaya-gammanpila

இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டின் அரச கரும மொழி தமிழாக இருந்த போதிலும் அங்குள்ள மக்கள் வங்காள மொழி தேசிய கீதத்தையே பாடுகின்றனர். அதேபோன்று இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின் பிரகாரம் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறில்லாது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டால் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும். இதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதிக்கு எதிராக இம்பீச்மெண்ட் எனப்படும் தேசத்துரோக குற்றச்சாட்டை முன்வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...