Designed by Iniyas LTD
மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் சோதனை
சதாப்தி விரைவு ரயில்களில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் தொலைபேசியில் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை ரயில்வே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், நாடு முழுவதும் இயக்கப்படும் 50க்கும் மேற்பட்ட சதாப்தி ரயில்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அனைத்து தலைமை அலுவலகங்களும் உஷார்படுத்தப்பட்டது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை புறப்பட்ட சதாப்தி ரயில்களில் மோப்ப நாய்களைக் கொண்டு தீவிர சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.