Designed by Iniyas LTD
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகம் வெட்ட அனுமதி கோரிய மனு தள்ளுபடி
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட வசதி ஏற்படுத்தி தர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொது நலன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட தடை விதித்து கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பிறப்பித்த உத்தரவை விலக்கிக் கொள்ளவும் மறுத்துவிட்டது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பல இடங்களில் ஒட்டகம் வெட்டப்படும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.