தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மறைந்த தமிழினியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக் கிரியைகள் நாளை  இடம்பெறவுள்ளன.

download (1)

அவரது சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதில் சிக்கல்கள் எழுந்திருந்தன. எனினும் நேற்றைய தினமே தமிழினியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரது சொந்த இடமான கிளிநொச்சி – பரந்தனுக்குக் கொண்டு வரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது பூதவுடலுக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழினியின் இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...