Designed by Iniyas LTD
மற்றுமொரு முன்னாள் போராளி உயிரிழப்பு..

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் இனங்கான முடியாத நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் (10/05/2019 வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவர் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி, நாலாம் கட்டையில் வசித்து வந்த, 31 வயதான குணசேகரம் வசீகரன் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இவர் மனிதநேய நலன் கருதி வெடிப் பொருட்களை அகற்றி வரும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்ததாகவும் தெரியவருகின்றது.
இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டடு சிகிச்சை வழங்கப் பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.