Designed by Iniyas LTD
மலையகத்தில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்ட பகுதியில் குடும்பஸ்தர் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான காந்தரூபன் (வயது 36) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பில் எதுவும் தெரியவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.