Designed by Iniyas LTD
மலையக மக்களுக்கு இனத்துவ அடையாளம் தேவை!
மலையக மக்களுக்கு விசேட சலுகைகள் தேவைப்படுகின்ற நிலையில் விசேட அடையாளமும் தேவைப்படுகின்றது. அந்த வகையில் இந்திய வம்சாவளி மலையக மக் கள் என்ற இனத்துவ அடையாளம் மிகவும் பொருத்தமுடையதாக இருக்கும் என்று பேராசிரியர் தை.தனராஜ் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளியினரை தனியாக அடை யாளப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தனராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
1960 களுக்கு முன்னர் மலையகத் தமிழர் மலையகம் என்றதொரு அடையாளம் காண ப்படவில்லை. மலையகம் என்றறொரு அடையாளம் உருவாக்கியதில் இரா.சிவலிங்கத்தின் பங்கு அளப்பரியதாகும். மலையக மக்கள், மலையக இலக்கியம் என்றெல்லாம் 60 களிலேயே தோற்றம் பெற்றதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அடையாளம் என்பதும் பன்முக அடையாளம் என்பதும் எம்மிடையே காண ப்படுகின்ற ஒரு நிலைமையாகும். நான் ஒரு இலங்கையின் தமிழன் இந்திய வம்சாவளித் தமிழன் என்ற வகையில் பன்முக அடை யாளங்கள் விரிந்து செல்கின்றன. இவற்றி டையே தனித்துவமான அடையாளம் குறி த்தும் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மலையக மக்கள் தனித்தேசிய இனமாக அங்கீகரிக் கப்பட வேண்டும். தனித்துவமான தொரு அடையாளம் அம்மக்களுக்கு இருக்க வேண்டும் என்பது தொடர்பில் இப்போது அதிகமான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
மலையக மக்கள் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன இல்லாத நிலையில் நீண்டகாலமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர். சகல துறைகளும் இதனால் பின்னடைவு கண்டிருந்தன. எனவே இம் மக்களுக்கு விசேட சலுகைகள் வேண் டும், விசேட ஒதுக்கீடுகள் வேண்டும் என் றெல்லாம் வலியுறுத்தல்கள் இடம் பெற்று வருகின்றன. உயர் மட்ட தொழிலில் எம்ம வர்களின் தொகை இல்லாத நிலையே காண ப்படுகின்றது. இலங்கை நிர்வாக சேவை யில் ஒருவருக்கு இப்போது இடம் கிடைத் துள்ளது. பல்கலைக்கழக மட்டத்தில் உள்ள ஐயாயிரத்துக்கும் அதிகமான விரிவுரையா ளர்களில் எம்மவர்கள் 19 பேர் மட்டுமே உள்ளனர். மலையக சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் தற்போது ஓய்வு நிலையில் உள்ளனர். இதற்கான தேவைப்பாடும் காண ப்படுகின்றன.
உடன்பாடான பாரபட்ச நிலைமைகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கேனும் எமது மக்களுக்கு அவசியமாக உள்ளன. இதன் மூலம் பல்வேறு சலுகைகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. மலையக மக்களுக் கென்று சலுகைகளும் ஒதுக்கீடுகளும் தேவைப்படுவதன் காரணமாக இம்மக் களை விசேட அடையாளத்துடன் தனித்துவப்ப டுத்தி காட்ட வேண்டியதற்கான தேவை யும் மேலெழுந்துள்ளது. இல்லாவிட்டால் நாங்கள் தமிழர்களாகவே இருந்துவிட்டு போகலாம். எமக்கு தனியான அடையாளம் தேவைப்படுகின்ற நிலையில் எவ்வாறு அழைக்க வேண்டும் என்பது முக்கியமாகும். மலையகத்தவர்களின் நகர மையப்படுத்திய செல்லுகை இப்போது அதிகமாக உள்ளது இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் மலையகத்தின் நிலைமை குறித்து சிந்திக்க வேண்டி இருக்கின்றது. மலையகம் என்பது புவியியல் அடையாளமா? அல்லது கலாசார அடையாளமா? என்பது தொடர்பில் நாம் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.
இந்திய தமிழர்கள், இலங்கை தமிழர் என்று பிரிவினை மேற்கொள்வதன் காரண மாக பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. இது அநேகமானவர்களுக்கு உரியவாறு விளங்குவதில்லை. இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கையை குறைவாக காட்டுவதன் மூலம் பல சலுகைகளும் வாய்ப்புகளும் எம்மிடம் இருந்து கை நழு விப் போகும் அபாய நிலை உருவாகும் என்பதனை மறந்து செயற்படக் கூடாது இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்ற அடையாளம் அனைவரையும் ஒன்றுப டுத்து வதாக நான் கருதுகின்றேன். இதனை நாம் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண் டும் என்றார்.